Monday 13 August 2012

ஒரு மரணம் சில கேள்விகள்-4


உமர் - ஹஃப்ஸா
தனது மகள் அழகற்றவர் என்று உமரே கூறுமளவிற்கு பேரழகுடையவர் ஹஃப்ஸா. முஹம்மது தானாக முன்வந்து ஹஃப்ஸாவைத் திருமணம் செய்துகொண்டார். உமரைத் தன்னிடம் தக்கவைத்துக்கொள்ள ஹஃப்ஸாவை திருமணம் செய்வதைத் தவிர முஹம்மதிற்கு வேறுவழிதெரியவில்லை.
மரியத்துல் கிப்தியா என்ற அடிமைப் பெண்ணின் அழகு காண்பவரைத் திகைக்கவைக்கக் கூடியது என்கின்றனர். இறுதிக் காலத்தில் முஹம்மதின் கவனம் மரியாவின்மேல் விழுந்தது. முஹம்மதின் இரண்டு டஜன் மனைவியர்களில் கதீஜாவைத்தவிர அவர் மட்டுமே இப்ராஹிம் என்ற மகனை பெற்றெடுத்தார். அவர் மரியாவின் பக்கம் சாய்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம். மரியாவின் குழந்தை இப்ராஹிம் திடீரென ஒரு நாள் இறந்துவிட்டது, (முஹம்மதுவும் அப்படித்தானே!)
            மரியத்துல் கிப்தியா விவகாரத்தில் அல்லாஹ்வால்(?) கண்டிக்கப்பட்ட பெண்களில் மற்றொருவர் உமரின் மகள் ஹஃப்ஸா. இந்த விவகாரத்தில் அவரது தரப்பு மிக நியாயமானது. தன்னுடைய இல்லத்தில், தன்னுடைய படுக்கையில் வேறொரு பெண்ணுடன் சல்லாபிக்கும் கணவனை எந்த ஒரு பெண்ணாலும் சகித்துக்கொள்ள முடியாது. ஹஃப்ஸா தனது கணவர் முஹம்மதின் ஈனத்தனமான இந்தசெயலை எதிர்த்து நியாயம் கேட்டார்.  தனது ஒழுக்கங்கெட்ட செயலை வெளிப்படுத்தக் கூடாது என்று முஹம்மது மிரட்டினார். இதை ஹஃப்ஸா, ஆயிஷாவிடம் கூற, அது மற்ற மனைவியர்களுக்கும் பரவியது. இதனால் ஒரு மாதம்வரை மனைவியர்களைவிட்டு விலகிச்சென்றார் ஒரு மாததிற்குப்பிறகு வழக்கம்போல குர்ஆன் வசனத்தைகூறி சேர்ந்து கொண்டார்.
இவ்விவகாரத்தில் உமர் தனது மகளைக் கண்டித்தாராம். உதாரணத்திற்கு, ஒருவரது மருமகன், தனது வீட்டிலிருக்கும் பணிபெண்ணுடன் படுக்கையில் சல்லாபம் செய்வதை கண்டு ஆத்திரத்தில் நியாயம் கேட்கும், தனது மகளையே கண்டித்து, மருமகனுக்கு வக்காலத்து வாங்கும் மாமனாரைப் பார்த்திருகிறீர்களா? அப்படியொரு ஈனப்பிறவியை எங்கும் தேடவேண்டம் என்கின்றனர் இஸ்லாமியர்கள். இவர்களது செயல்கள் மடத்தனமாகத் தெரியவில்லையா? ஹஃப்ஸாவின் செயலைகண்டித்து, முஹம்மது, குர்ஆன் வசனங்களை வேறு எழுதிவைத்துக்கொண்டார். அதை இந்த கேணயர்களும் புனிதமென்று கூறி தொழுகின்றனர்.
அபூபக்கர் – ஆயிஷா, உமர் – ஹஃப்ஸா இந்த நால்வருக்கும் முஹம்மதின் மீது ஏன் பகைமை இருக்கக்கூடாது? அபூபக்கர் முஹம்மதின் குடும்பத்தினரின் மீது தீராத வன்மம் கொண்டிருக்க வேண்டும். அவரையும் அறியாமல் அது வெளிப்பட்டது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவை யெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அந்தச் சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன் என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாத காலம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்த போது, அவர்களின் கணவர் அலீ (ரலி) அவர்கள், (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள்.
முஹம்மது மரணப் படுக்கையிலிருந்த பொழுது தனது மகள் ஃபாத்திமாவை அழைத்து, சொர்க்கத்தின் தலைவி என்றுகூறி வாழ்த்தினார். ஆனால் அவருக்கு தனது தந்தையின் போதனையான,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
என்ற கட்டளை தெரியவில்லை போலும். அதனால்தான் அபூபக்கரிடம் வாரிசுரிமை கோரியிருக்கிறார். இந்த ஃபதக் சொத்திற்காக அலீ, அப்பாஸ், உஸ்மான் என்று பலரும் வாரிசுரிமை கோரியுள்ளனர். இவர்களனைவருக்குமே முஹம்மதின் போதனைகள் தெரியவில்லையா? அல்லது பொருட்படுத்தவில்லையா? ஃபாத்திமா அதோடு நிற்கவில்லை, முஹம்மதின் போதனைகளை செவ்வனே நிறைவேற்றத் துடிக்கும் அபூபக்கரிடம் கோபம் கொண்டு தனது மரணம்வரை பேசாமலிருப்பதுடன், தனது மரணச் செய்திகூட அபூபக்கர் அறியக்கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.
(முஸ்லீம்)
சரி..! வாரிசுரிமையைப்பற்றிதான் ஃபாத்திமா அறியவில்லை, சக முஸ்லீமிடம், மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருப்பது ஹராம் என்று கூறியிருப்பது ஃபாத்திமாவிற்கு தெரியுமா? இல்லை தெரியாதா? முஹம்மது ஊருக்குதான் உபதேசம் செய்தாரா? இங்கு தவறிழைத்தது அலீ-ஃபாத்திமாவா? இல்லை அபூபக்கரா?
அடுத்த்தாக வாரிசுரிமை கேட்பது முஹம்மதின் மனைவியர்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது, அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர்.
(முஸ்லீம்)
இவர்களும் கூட முஹம்மதின் போதனையை அறியவில்லையாம். ஒரு சாதாரண விஷயத்தைக் குடும்பத்தினருக்குக் கூட கற்பிக்காமல், 23 ஆண்டுகள் எதை “....”ங்கிக் கொண்டிருந்தார்?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இறுதி (ஜனாஸா)த் தொழுகை தொழுவித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்தவரையில், அலீ (ரலி) அவர்கள்மீது மக்களுக்கு ஒரு தனிக் கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள்.
எனவே, (கலீஃபா) அபூபக்ரிடம் சமரசம் பேசவும் வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்துகொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர் களுக்கு அலீ (ரலி) அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை....
பிறகு அலீ (ரலி) அவர்கள் (எழுந்து), ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை வாழ்த்திய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். "தாம் இவ்வாறு (ஆறு மாதம்) நடந்துகொள்ளக் காரணம், அபூபக்ர் (ரலி) அவர்கள்மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல. மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்குப் பங்கு உண்டு என (நபியின் குடும்பத்தாராகிய) நாங்கள் கருதிவந்ததேயாகும். ஆனால், (எங்களிடம் ஆலோசிக்காமல்) தன்னிச்சையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது'' என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ (ரலி) அவர்களைப் பார்த்து) "நீங்கள் சரியாகவே நடந்துகொண்டீர்கள்'' என்று கூறினர். இயல்பு நிலைக்கு அலீ (ரலி) அவர்கள் திரும்பியபோது, முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களிடம் நெருக்கமானவர்களாக ஆகி விட்டனர்.
(முஸ்லீம்)
ஃபாத்திமா இறப்பினால் அலீ மக்களின் அபிமானத்தை இழக்கவேண்டிய தேவை என்ன? அபூபக்கரை ஆதரித்தால் மக்களின் அபிமானத்தை மீண்டும் பெற்றாராம். வேடிக்கையாக இல்லையா?
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களை விமர்சிக்கு மாறு) எனக்கு உத்தரவிட்டார்கள். "நீர் அபுத்துராப் (அலீ) அவர்களை ஏச மறுப்பதற்கு என்ன காரணம்?'' என்று முஆவியா (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்ன மூன்று விஷயங்களை நான் (இன்றும்) நினைத்துப்பார்க்கிறேன். ...
(முஸ்லீம்)
ஹதீஸ்கள் பெருமளவில் உருவானது இந்த காலக்கட்டத்தில்தான். அலீ, ஆயிஷாவின் வாலை ஒட்டநறுக்கிய பிறகுதான் அவரும் ஹதீஸ்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஹதீஸ்களின் தேவை உருவானதும் இப்படித்தான்.
இந்த ஃபதக் விவகாரம் அபூபக்கர் கூறியதுடன் முடிவடையாமல் உமரின் காலத்திலும் தொடர்ந்தது. (சற்று நீளமான ஹதீஸ்கள் விவகாரத்தைமட்டும் புரிந்துகொள்ள ஏதுவாக சிலபகுதிகளை மட்டும் தருகிறேன்).
மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பிறகு (சற்று நேரம் கழித்து) யர்ஃபஉ வந்து, "அப்பாஸ் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் (தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். அவர்களைச்) சந்திக்க அனுமதிக்கிறீர்களா?'' என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் "ஆம்' என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் பொய்யரும் பாவியும் நாணயமற்றவரும் மோசடிக்காரருமான (என் சகோதரர் மகனான) இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்று சொன்னார்கள்....
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?'' என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் "ஆம் (அவ்வாறு சொன்னதை நாங்கள் அறிவோம்)'' என்று பதிலளித்தனர்...
...அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்' என்று பதிலளித்து (அதைத் தர மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பொய்யராகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே உரைத்தார்கள்; நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்; அந்தச் செல்வத்துக்குப் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும் செயல்பட்டேன்.) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள்....
(முஸ்லீம்)
முஹம்மதின் குடும்பத்தினர், அபூபக்கரையும், உமரையும் பொய்யர்களாகவும் பாவியாகளாகவும் நாணயமற்ற மோசடிக்காரர்களாகவுமே கருதிவந்துள்ளனர். முஹம்மதின் மகள் ஃபாத்திமா, மருமகன்களும், ஆயிஷாவைத் தவிர அவரது மற்ற மனைவியர்களும் மற்றும் இதர உறனவினர்கள் கூட முஹம்மதின் போதனையை அறியாமல் வாரிசுரிமை கோரி போராட்டம் நடத்தியுள்ளனர் என்பதை கேட்கவே வேடிக்கையாக உள்ளது.
தொடரும்...

தஜ்ஜால்

Facebook Comments

27 கருத்துரைகள்:

ஆர்ய ஆனந்த் said...

முஹம்மது இறப்பதற்கு முன்பு பல நாட்கள் குரல்வளையை அறுத்தால் ஏற்படுகிற வலியை போன்று தாங்கமுடியாத வலியை தான் அனுபவிப்பதாக அவர் கூறிவந்தார். அவர் கொடிய விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம். இந்த புனித செயலை அவரது உற்ற நண்பர்களான அபுபக்கரும் உமரும் சேர்ந்து நிறைவேற்றி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. மேலும் இந்த சதியில் உஸ்மானின் பங்கையும் மறுதலிக்க முடியாது.

அதனால்தான் என்னவோ ஷியாக்கள் இந்த மூவரையும் நயவஞ்சகர்கள், பொய்யர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் அதேசமயம் ஷியா இஸ்லாம் ஒரு பொய்யான இஸ்லாம். முஹம்மதின் கொள்கை அடிப்படையில் சுன்னி இஸ்லாமே சரியான இஸ்லாம். ஷியா இஸ்லாம் பொய்யுக்குள் (இஸ்லாம்) இருக்கும் ஒரு பொய்(lie within a lie).

சிவப்புகுதிரை said...

என்னங்க தஜ்ஜால் இப்படி பன்னிட்டிங்க...சில கேள்விகள்னு சொல்லிட்டு இவலோ கேள்வி கேட்குரிங்க? அது என்ன முகமது சுவனவாசிகள்னு சொன்னவங்க யாரும் முகமது பேச்ச கேட்கல.அவங்களே கேட்களனா எப்படி சாதரன மூமீன் கேட்பான்....

சார்வாகன் said...

வணக்கம் சகோ
நல்ல் பதிவு. முகம்துவின் இறப்பிற்கு பின் வந்த வாரிசு சண்டை பற்றி நாம் எழுதிய பதிவு.

முதல் கலிஃபா அபுபக்கரின் தேர்வு
http://saarvaakan.blogspot.com/2011/08/blog-post.html

Thank you

இசா said...

நல்ல ஆராய்ச்சி.
நம்ம காககககேவோட மௌத்த பத்தி நான் ஒன்னு எழுதலாம்னு இருந்தேன். பரவாயில்லை. எழுதுங்கள்.

தஜ்ஜால் said...

@ ஆர்ய ஆனந்த்,
வாருங்கள் ஆர்ய ஆனந்த், இந்த விவகாரத்தில் ஷியாக்களின் வாதத்தில் நியாயமிருப்பதாகவே தோன்றுகிறது. ஷியாக்களின் ஆதாரங்களைப் படித்தால் தலைசுற்றுகிறது.

தஜ்ஜால் said...

@சிவப்புக்குதிரை,
சில கேள்விகள்தான். நான் கேட்க நினைப்பதில் சில கேள்விகளைத்தான் இங்கு கேட்கிறேன்.

தஜ்ஜால் said...

@சார்வாகன்,
நன்றி சார்வாகன், இந்த வாரிசு சண்டைதான் என்னுள் எழுந்த முதல் கேள்வி.

தஜ்ஜால் said...

@இசா,
நன்றி இசா, உங்களது பாணியில் போட்டுத்தாக்குங்கள். இந்த விவகாரத்தில் இன்னும் நிறைய விஷயமிருக்கிறது. நீங்கள் எழுத இருப்பதை அறிந்திருந்தால், இதை சற்று சுருக்கமாக முடித்திருப்பேன். அடுத்த பகுதியுடன் முடித்து விடுகிறேன்

Unknown said...

அவர்கள் எழுதி வைத்த ஹதீஸ் அவர்களுக்கே ஆப்பு வைக்கிறதா? நல்ல கமெடி தொடருங்கள் தஜ்ஜால் சூப்பர்...............

இனியவன்...

Tamilan said...

@தஜ்ஜால், அருமையான பதிவு, தொடர்,
ஒரு சிறு விண்ணப்பம்.

//23 ஆண்டுகள் எதை “....”ங்கிக் கொண்டிருந்தார்?//
உங்களின் முந்தய பதிவுகளில் இந்த மாதிரியான வார்த்தைகள் இல்லை. முகமதுவை வசைபாடுவதை பார்த்தால் எந்த முஸ்லிமுக்கும் அதன் பின் இந்த பதிவில் உள்ளது மண்டையில் ஏறாது. (என்னை உடுங்க - நான் ஹிந்துக்களுக்காக எழுதுகிறேன்) . நண்பர் இ.சா வுக்காக உங்களின் பதிவுகளை குறைக்கவேண்டாம். அவர் எழுதும் பாணியே தனி. நீங்கள் எழுவதில் இருந்தும் அவருக்கு சில குறிப்புகள் கிடைக்கலாம். அதனால் உங்களின் பதிவுகளை தொடருங்கள்.

Anonymous said...

tholarey nan mobile use panran hadith padika mudiyala antha colour change panna mudiyuma pls

Anonymous said...

tholarey nan mobile use panran hadith padika mudiyala antha colour change panna mudiyuma pls

தஜ்ஜால் said...

@நண்பர் தமிழன்,
//உங்களின் முந்தய பதிவுகளில் இந்த மாதிரியான வார்த்தைகள் இல்லை.// உண்மைதான். மக்களை எந்த அளவிற்கு முட்டாளாக்கியிருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் வெளியான வார்த்தை. இருப்பினும் இனி தவிர்த்து விடுகிறேன். மிக்க நன்றி தமிழன்.

தஜ்ஜால் said...

இனிவரும் பதிவுகளில் ஹதீதுகளின் வண்ணத்தை மாற்றிவிடுகிறோம். கருத்துக்களையும் பதிவிடுங்கள். நமது தளத்தைப்பற்றி மக்களிடம், குறிப்பாக இஸ்லாமியர்களிடம் பரவிட உதவுங்கள்

Unknown said...

வணக்கம் தஜ்ஜால்,

//நமது தளத்தைப்பற்றி மக்களிடம், குறிப்பாக இஸ்லாமியர்களிடம் பரவிட உதவுங்கள்//

ஏற்கனவே நான் சில பதிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்தும் வருகிறேன்,அதில் ஒரு நண்பர் படித்துவிட்டு இதெல்லாம் சைத்தான் பண்ணுகிற வேலை என்றாரே பார்க்கலாம்!!!!!! ஒருசில இஸ்லாமியர்கள் எதையும் படிப்பதற்கே விரும்பமில்லாதவர்களாகத்தான் இன்றும் இருக்கிறார்கள். குரான் ஹதீதைக் கூட படிக்க சிரமப்படுகிறார்கள் டி.வி.பார்ப்பதையே முழு நேர பழக்கமாக இருந்துவருகிறார்கள். அவர்கள் மண்டைக்குள் இருப்பதெல்லாம் அல்லாஹ்,முகம்மது,தொழுகை அவ்வளவுதான். சிந்தனை மருந்துக்குக் கூட இல்லை என்பதே உண்மை,இருந்தாலும் தொடர்ந்து முயற்சிக்கிறேன் முதலில் சிரமம் என்றாலும் விரைவில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன்.

இனியவன்....

தஜ்ஜால் said...

@ இனியவன்
//அவர்கள் மண்டைக்குள் இருப்பதெல்லாம் அல்லாஹ்,முகம்மது,தொழுகை அவ்வளவுதான். சிந்தனை மருந்துக்குக் கூட இல்லை என்பதே உண்மை,இருந்தாலும் தொடர்ந்து முயற்சிக்கிறேன் முதலில் சிரமம் என்றாலும் விரைவில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன்.// இது மறுக்க முடியாத உண்மைதான்.
பள்ளிவாசலுக்குள் சென்றும், அந்த வட்டத்து நண்பர்களையும் சந்தித்து நிறைய நாட்களாகிவிட்டதால், நேற்று (15.08.2012) லைலத்துல் கத்ர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். பள்ளிக்குள் வைத்து, சிலரிடம் மெதுவாக எனது பிரச்சாரத்தை துவங்கினேன். நான்கு நபர்கள் நமது வாதத்திலுள்ள நியாயத்தை உணர்ந்தனர். மற்றவர்கள், வேண்டுமென்றே பிவாதமாக நமது கருத்தை உள்வாங்க மறுத்தனர். மிகப் பெரும்பாலனவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். நமது பிரச்சார யுக்தியை மாற்றவேண்டுமா?

சிவப்புகுதிரை said...

தஜ்ஜால் அவர்களே ஒரு சின்ன சந்தேகம் கொஞம் விளக்குனால் நல்ல இருக்கும்...

நானும் நேற்று லைலத்துர் கதர் தொழுகைக்காக நன்பர்களோடு பள்ளிக்கு சென்று இருந்தேன்..கூட்டம் அதிகமாக இருந்ததான் பள்ளியின் மாடியில் தொழுதுக்கொண்டு இருந்தோம்.திடீர் என்று நல்ல மழை.4ரக்கையாது முடிந்தவுடன் எல்லாரும் ஓடினொம் மழையில் இருந்து தப்பித்துக்கொள்ள.ஆனால் மழை நின்றப்பாடுயில்லை லைலத்துர் கதிர் சிறப்பு தொழுகை மாடியில் இருந்த 500 பேருக்கும் மை.............போட்சி.இதில் எனக்கு இருக்கும் சந்தேகம் என்னன்னா...அந்த மழைய வரவட்சது யாரு? அண்ட அகிலத்தையும் ஆளும் அல்லாவா இல்லை இண்டு இடுக்கிலும் இருக்கும் சைத்தானா?

Unknown said...

தஜ்ஜால்.

//நமது பிரச்சார யுக்தியை மாற்ற வேண்டுமா?//

கண்டிப்பாக மாற்றியாக வேண்டும் அதற்காண என்ன வழி என்பதை நண்பர்கள் சிந்தித்து ஒரு நல்ல யோசனை வழங்கினால் உதவியாக இருக்கும்.

இனியவன்....

Unknown said...

நேற்று இரவு கூட ஒரு சம்பவம் நடந்தது நான் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன்,நண்பர் ஒருவர் தகஜ்ஜத் தொழுகைக்கு அழைத்தார் நீங்கள் செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என்று சொன்னேன்,அதற்கு அவர் டி.வி.நாளைக்குக் கூட பார்த்துக் கொள்ளலாம் என்றார் நான் அதற்கு இதுவும் அடுத்த வருடம் வரும் என்றேன்,என்னை முறைத்துக் கொண்டே சென்று விட்டார்.மறுநாள் அவரிடம் ஒரு சுயநலத்திற்கு நான் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றேன். எப்படி அது சுயநலமாகும் என்றார்? நீ தொழுதா அது உனக்கு மட்டுமே நன்மை,நான் தொழாதிருந்தால் மற்றவர்களுக்கு தீங்கோ,அல்லது தொழுதால் மற்றவர்களுக்கு உபயோகமோ இருந்தால் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,அதனால் அத்தொழுகை எனக்குத் தேவையில்லை என்றேன்.மேலும் இறைவனை வணங்கினால்தான் இவ்வுலகில் வாழமுடியும் என்ற நிர்பந்தம் இப்புவியில் மனிதன் உட்பட எந்த உயிரினங்களுக்கும் இல்லை என்பதையும் விளக்கினேன்.

இனியவன்.....

ஆர்ய ஆனந்த் said...


// //நமது பிரச்சார யுக்தியை மாற்ற வேண்டுமா?//

கண்டிப்பாக மாற்றியாக வேண்டும் அதற்காண என்ன வழி என்பதை நண்பர்கள் சிந்தித்து ஒரு நல்ல யோசனை வழங்கினால் உதவியாக இருக்கும்.

இனியவன்.... //

நாம் யோசிப்போம். ஆனால் நாம் உலகளவில் போதுமான பலம் பெறும்வரையில், நம்முடைய செயல்பாடுகள் இணைய தளம் மூலமாகவே இருக்க வேண்டும். நம்முடைய பாதுகாப்பு மிக அவசியம். முஸ்லிம்கள் சாவை போற்றுபவர்கள். இஸ்லாம் ஒரு மரண கல்ட். நாம் உயிர் வாழ்வை போற்றுபவர்கள். எனவே நமக்கு உயிர்த்தியாகிகள் தேவை இல்லை. நம் கூட்டணி உலகளவில் பலம் பெறும்போது நாம் வெளி வருவோம்.

தஜ்ஜால் said...

நண்பர் இனியவன்,
//நம் கூட்டணி உலகளவில் பலம் பெறும்போது நாம் வெளி வருவோம்.// இப்பொழுதே, என் நெருங்கிய உறவினர்களில் சிலர், அவர்களது வாரிசுகளை, நான் கெடுப்பதாகக் கூறி முறைக்கின்றனர். இணையளம் மூலம் நமது கருத்துக்களை கொண்டு செல்வது பாதுகாப்பானதுதான் ஆனால் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றே தோன்றுகிறது. முஸ்லீம்களில் பலர், இஸ்லாமின்மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் இருப்பதும், இணையதளங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தகைய விவாதங்களைப்பற்றியும் ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றனர்.

ஆர்ய ஆனந்த் said...

@ தஜ்ஜால்,

// இணையளம் மூலம் நமது கருத்துக்களை கொண்டு செல்வது பாதுகாப்பானதுதான் ஆனால் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றே தோன்றுகிறது. முஸ்லீம்களில் பலர், இஸ்லாமின்மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் இருப்பதும், இணையதளங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தகைய விவாதங்களைப்பற்றியும் ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றனர். //

உண்மைதான். மற்ற மதத்தினரைவிட முஸ்லிம்களில் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மிக மிக குறைவு. முஸ்லிம்களை இஸ்லாதின்மீதான குற்றசாட்டுகளை பற்றி படிக்க வைப்பது என்பது மிக கடினமான செயல். அதிலும் இணைய தளத்தை பயன்படுத்தும் முஸ்லிம்கள் மிக அரிதானவர்களே.

இஸ்லாத்துக்கு எதிரான போரில் நாம் முதல் நிலையில்(Phase) இருக்கிறோம். இந்த நிலையில் நாம் இணைய தளத்தின்மூலம் மட்டுமே செயல்பட வேண்டும். ஏனெனில், இஸ்லாமையும் முஹம்மதையும் விமர்சிக்கும் எந்த நபரையும் படுகொலை செய்வது, முஹம்மதின் வழக்கத்தின்படி(சுன்னத்) இஸ்லாமிய மத கடமையாக உள்ளதால்
நாம் நம்முடைய பாதுகாப்பை கருதி, இணைய தளத்தின் மூலம் மட்டுமே நம் பிரசாரத்தை நடத்த வேண்டும்.

சிவப்புகுதிரை said...

நன்பர்களுக்கு ஒரு தகவல்..நமது தளத்தின் FACEBOOK ACCOUNTல், நமது இடுக்கைகள் தொடர்ந்து பதிவுசெய்யபடுகின்றது..அதன் மூலம் நமது தளத்தை விரிவு செய்ய வாய்ப்பு இருக்கின்றது.

Tamilan said...

@அய்யோ பாவம் சிவப்புகுதிரை, நானும் எனது தளத்தில் facebook இணைத்து இருந்தேன். ஒரே மாதத்திற்குள் எனது ஃபேஸ்புக் தளம் மூடப்பட்டுவிட்டது .. அல்லாவின் சக்தியை என்னவென்று நினைக்கிறிர்கள்....

சிவப்புகுதிரை said...

@ தமிழன்

உண்மை தான் ..குறைந்த பச்சம் அதுவ்ரைக்குமாச்சும் பரவட்டும் என்று தான் முயற்சிக்கின்றேன்..

Anonymous said...

Hi,
I am going through your articles for the past 10 days. Very interesting! and convincing also...
My questions are...
Whether your people arround you in your town and work place know about your internet activities? Is it not dangerous for your safety?
Your own kith and kin will not accept you....Is it not? How do you manage? Will it not affect your social life?
These doubts will come in any
freethinker's mind. It comes in my mind!
If it is possible please answer these questions.
A friend.

தஜ்ஜால் said...

@Anonymous
நன்றி நண்பரே!
//Whether your people arround you in your town and work place know about your internet activities? Is it not dangerous for your safety?// நாங்கள் தமிழகத்தின் பலபகுதிகளில் பரவியிருக்கிறோம். நிச்சயமாக இது உயிருக்கு மிகவும் ஆபத்தான பணி என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதற்காக எத்தனை காலம் ஒதுங்கியிருப்பது? குறிப்பாக மதத்தின் பெயரால் முஸ்லீம்களை எத்தனை காலம்தான் முட்டாள்களாக்க அனுமதிப்பது? //How do you manage? Will it not affect your social life?// சில நண்பர்கள் வெளிப்படையாக தங்களை அறிவித்து விட்டனர். மற்றுள்ளவர்கள், முஸ்லீம்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படும்வரை, இன்னும் சில காலங்களுக்கு முகமூடிகளுடன் வலம் வருவதைத்தவிர வேறுவழியில்லை. இத்தளத்தை மற்ற முஸ்லீம்களுக்கும் அறிமுகம் செய்துவைத்து உதவுங்கள்.